-->

திட்ட கண்ணோட்டம்

வாழுங்கள் அல்லது அன்பின் அரவணைப்பில் வாழுங்கள்!!

பாபிலோனாவின் "ஹாங்கிங் கார்டன்ஸ்", பண்டையகாலத்தின் அதிசயங்களில் ஒன்றானது மன்னர்களுக்காக கட்டப்பட்டது.மக்கள் தொலைதூரத்திலிருந்து இதை பார்க்க ஆவலாக வந்தார்கள். இதிலிருந்து ஈர்க்கப்பெற்று எங்கள் சமீபத்திய தலைசிறந்த படைப்பான நவீன்சின் "ஹாங்கிங் கார்டன்ஸ்" ஐ இப்பொழுதிய மன்னர்களுக்காக வழங்குகிறோம்.

அறிய தாவரங்களும் அதன் செழிப்பான மொட்டை மாடிகளும் பாபிலோனியர்களின் ரத்தினமாகும். இதை ஒப்பிடுகையில் நவீன்சின் "ஹாங்கிங் கார்டன்ஸ்" சென்னையின் அடுத்த அதிசயமாகும். இது பலருக்கும் பொறாமை தரும் இடம், ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே வீடு.இந்த சின்னமான திட்டம் ஆற்காடு சாலையில், சென்னை டின்ஸ்ல் டவுன், வளசரவாக்கத்தில் அமைந்துள்ளது. 107 மாசற்ற முறையில் வடிவமைக்கப்பட்ட 2 & 3 BHK வீடுகள் (MSBUP 1125-1660 Sqft), 13 மாடிகளில், இயற்கையின் மாயாஜாலத்தை நவீன்ஸ் சிறப்பான கைவினைத்திறனுடன் அரங்கேற்றியுள்ளது.

சென்னையின் மிகப்பெரிய அதிசயத்திற்கு வரவேற்கிறோம்,

>

நவீன்சின் "ஹாங்கிங் கார்டன்ஸ்".

என்ன நேர்த்தியான இயற்கை மலர் அனுபவம் - நவீன்ஸ் "ஹாங்கிங் கார்டன்ஸ் "ல்

நவீன்ஸ் "ஹாங்கிங் கார்டன்ஸ் "ல் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய நாள், ஒரு புதிய அனுபவம் மற்றும் ஒரு புதிய நினைவகத்தை அனுபவிப்பீர்கள்.

ஹாப்ஸ்காட்ச் பகுதி

நீங்கள் ஹாப்ஸ்காட்ச் விளையாடிய நாட்கள் நினைவிருக்கிறதா? உங்கள் குழந்தைப் பருவ நினைவுகளை மீண்டும் வாழ & ஹாப்ஸ்காட்ச் தோட்டத்தில் ஹாப்ஸ்காட்ச் விளையாட்டின் மூலம் புதியவற்றை மீண்டும் உருவாக்க உங்களுக்கு வாய்ப்பு அளிக்கிறது . இந்த பாரம்பரிய இந்திய விளையாட்டு, உடலுக்கு நெகிழ்வுத்தன்மையைக் கொண்டுவரும் என்று நம்பப்படுகிறது, அதே நேரத்தில் உடற்பயிற்சியின் தீவிர வடிவமாக உள்ளது. வெப்பமண்டல தாவரங்கள் கொண்ட இந்த தோட்டம் அந்த இடத்திற்கு அழகு சேர்க்கிறது.

ஃப்ராங்கிபாணி பகுதி

நறுமணமுள்ள ஃப்ராங்கிபாணி பூக்களைக் கடந்து செல்லும்போது நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். இது உற்சாகமான மனநிலையை மேம்படுத்துபவை என்றும் மன அழுத்த நிவாரணிகள் என்றும் நம்பப்படுகிறது. ஃப்ராங்கிபாணி பூக்கள் பாபிலோனின் பண்டைய மன்னர்களால் வாழ்க்கை, மறுபிறப்பு மற்றும் அமைதியுடன் நெருக்கமாக தொடர்புடையதாக இருந்துள்ளது . இந்த ஃப்ராங்கிபாணி தோட்டத்தில் நீங்கள் ஓய்வெடுக்கவும், புதிய நினைவுகள் மற்றும் உங்கள் குடும்பத்துடன் வாழ்க்கையின் புதிய மகிழ்ச்சியைக் கண்டறியவும் உங்கள் மன அழுத்தத்தை நீக்க்கியும் பயனடைவீர்கள்.

மூங்கில் பகுதி

கடினமான வேலைக்குப் பிறகு, மூங்கில் தோட்டத்தில் ஒரு நடைப்பயணத்தின் மூலம் நீங்கள் புத்துயிர் பெறுவீர்கள். உயரமான, பசுமையான மூங்கில் மரங்கள், அதிக ஆக்ஸிஜனை வெளிப்படுத்தும் தன்மையுடையது - இயற்கையின் அழகோடு உங்களை உயிர்ப்பிக்கின்றன.

விளையாட்டு பகுதி

உங்கள் குழந்தைகள் தங்கள் உள்ஆர்வத்தையும், விளையாட்டுத்தனத்தையும் ஊட்டுகின்ற ஒரு அமைதியான மற்றும் பாதுகாப்பான சூழலில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளட்டும். சிறந்த உபகரணங்களுடன், உங்கள் குழந்தை இந்த பகுதியில் பாதுகாப்பாக விளையாடுவதை நீங்கள் கண்டு மகிழ்ச்சியடைவீர்கள்.

கிராண்ட் புல்வெளி

கிராண்ட் லான்னிலிருந்து (Lawn) குளிர்ந்த காற்று மற்றும் அழகிய நிலப்பரப்பை ரசித்தவாறு ஓய்வெடுங்கள். அனைத்து மொட்டை மாடிகளின் மையப்பகுதியாக விளங்கும் இந்த புல்வெளி ஒரு வார இறுதியிலோ அல்லது பண்டிகை /விழாவின்போதோ சந்திப்பதற்கு சரியான இடமாக அமைகிறது.

பனை முற்றம்

பனை மரங்கள் அரசகுலத்தின் அடையாளங்களாக கருதப்பட்டன. இந்த பெரிய இலைகளை கொண்ட மரங்கள் பார்ப்பதற்கு அழகாகவும் மற்றும் தூய்மைப்படுத்தும் பண்புகளை கொண்டதாகவும் நம்பப்படுகிறது. அரசகுலத்தின் அடையாளங்களாக கருதப்பட்ட பனை மரங்களுக்கு மத்தியில் உலாவவும் மற்றும் உள்ளத்தின் புத்துணர்ச்சியை உணரவும் செய்வீர்கள்.

நறுமண மலர்கள் முற்றம்

வண்ணமயமான பூக்களின் தோட்டத்தில் நீங்கள் நடந்து செல்வதை கற்பனை செய்து பாருங்கள், அவற்றின் செறிவான வாசனை காற்றில் பரவி, உங்கள் மனதையும் ஆன்மாவையும் நிரப்புகிறது. மறக்கமுடியாத மற்றும் என்றென்றும் போற்றப்பட்ட அனுபவம். வாசனைக்காக அறியப்படும் தாவரங்கள் மற்றும் மலர்களால் நிரம்பிய இந்த பகுதி நறுமணம் மிக்க ஒரு பயணமாக இருக்கும்.

மருத்துவ செடி முற்றம்

தாவரங்களுக்கு மருத்துவ குணங்கள் உள்ளன என்று நீங்கள் எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா, சில காற்றை சுத்திகரிக்கலாம், சில மன அழுத்த நிவாரணிகளாக இருக்கலாம். இப்பகுதியில், நல்ல மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை தரக்கூடிய செடிகளை வைத்திருப்பதின் மூலம் இயற்கையின் அற்புதமான தன்மையை நீங்கள் அனுபவிக்க முடியும். இந்த மருத்துவ பகுதியின் வழியாக செல்லும் பொழுது இந்தச்செடிகளை தொடுவதின்மூலம், தூயக்காற்றை நுகர்வதின்மூலமும் ஆரோக்கியமான வாழ்க்கையை பெறலாம்.

வெப்பமண்டல முற்றம்

மன்னர்கள் மற்றும் பேரரசர்களின் பாதையில் இந்த ஆடம்பரமான வெப்பமண்டல வழியாக நடந்து செல்லுங்கள். பாபிலோனின் ஆரம்பகால அரசர்கள் "ஹாங்கிங் கார்டன்ஸ்" யையும் வெப்பமண்டல மொட்டைமாடி தோட்ட காட்சிகளையும் அனுபவித்தார்கள் என்று நம்பப்படுகிறது. இப்போது, உங்கள் முறை! தாவரங்கள் அலைபாய்ந்து, குளிர்ந்த காற்ற்றை வீசி அதில் உட்கார்ந்து அனுபவிக்க உங்களை வரவேற்கிறோம்!

பிரம்மாண்டமான பகுமுகக்கூடம் (லாபி)

ஏ 4 உச்சவரம்பு கூடிய உயர்ந்த பிரமாண்டமான லாபியை கண்டு வியக்காமல் உள்செல்வது கடினம். இது மிக்க கூறிய சிந்தனையுடன், கடினமான மற்றும் மென்மையான நிலப்பரப்புகளை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட பளிங்கின் வெவ்வேறு அமைப்புகளுடன் நேர்த்தியான விளக்குகளுடனும் சுற்றியுள்ள பசுமமையின் அழகை ரசிக்க வலியுறுத்துகின்றன.

வசதிகள்

...
பல்நோக்கு மண்டபம்

இயற்கையை ரசித்து அனுபவித்த பிறகு, இரண்டு நிலை ஆடம்பரமான கிளப் ஹவுஸில் பரந்த அளவிலான ஆடம்பரமான வசதிகளை அனுபவிக்கவும். ஹாப்ஸ்காட்ச் மொட்டை மாடியைக் கண்டவாறே எங்கள் நன்கு பொருத்தப்பட்ட உடற்பயிற்சி கூடத்தில் உங்கள் உடலை மேம்படுத்தவும் இல்லையெனில், குழந்தைகளின் விளையாட்டுப் பகுதியை கண்டவாறே பல்நோக்கு மண்டபத்தில் ஓய்வெடுக்கவும் அதே சமயம் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும்.

...
உடற்பயிற்சி கூடம்

உடற்பயிற்சி கூடத்தின் மூலம் உங்கள் மனமும் உடலும் புத்துயிர் பெறும். தோட்டங்களின் அழகிய அனுபவத்தைச் சுற்றி ஒரு புத்துணர்ச்சியூட்டும் நடைப்பயணத்திற்குப் பிறகு, இயற்கையை ரசித்தவாரே பயிற்சியாளர்களின் உதவியோடு உடற்பயிற்சி கூடத்தில் தினமும் ஆரோக்கியமாக இருங்கள்.

தரைத்தளத் திட்டம்

அமைந்துள்ள இடம்

நவீன்ஸ் "ஹாங்கிங் கார்டன்ஸ்" ஆர்காட் சாலையில், சென்னையின் டின்ஸல் டவுன், வளசரவாக்கத்தில் உள்ளது. நவீன்ஸின் "ஹாங்கிங் கார்டன்ஸ்", நகரத்தின் சலசலப்பான மையத்தில் ஒரு அமைதியான இடம். "ஹாங்கிங் கார்டன்ஸ்" உங்களைப் போற்றுவதற்கான ஒரு வீடு; உங்கள் கனவுகள், அபிலாஷைகள் மற்றும் வெற்றிகள்.வரவிருக்கும் வளசரவாக்கம் மெட்ரோ ஸ்டேஷனில் இருந்து 10-15 min தொலைவில் உள்ளது. உங்கள் குடும்பத்துடன் பாதுகாப்பான மற்றும் பாதுகாக்கப்பட்ட குடியேற்றத்திற்குத் தேவையான அணைத்து வசதிகளையும் கொண்டது. நவீன்ஸின் "ஹாங்கிங் கார்டன்ஸ் " ஒரு மதிப்புமிக்க முகவரியைக் காட்டிலும், வீட்டில் அன்பை அரவணைப்பை உணரவும், உங்கள் குழந்தைகள் தங்கள் மகிழ்ச்சியான தருணங்களை உருவாக்கும் இடமாகவும் அமைந்துள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, இது உங்கள் கனவு இல்லம்.

  • 1. அரைஸ் 'என்' ஷைன் சர்வதேச பள்ளி - 240 மீ
    2. பொன் வித்யாஷ்ரம் குரூப் ஆஃப் சிபிஎஸ்இ பள்ளிகள்- 1.8 கி.மீ
    3. பிஎஸ்பிபி பள்ளி - 3.4 கி.மீ
    4.சின்மயா வித்யாலயா - 3.9 கி.மீ
    5.தேவி அகாடமி மேல்நிலைப் பள்ளி - 550 மீ

  • 1. எஸ்ஆர்எம் ஈஸ்வரி பொறியியல் கல்லூரி - 2.2 கிமீ
    2. மீனாட்சி பொறியியல் கல்லூரி - 2.3 கி.மீ
    3. அவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி - 2.6 கிமீ

  • 1. சந்திரா மெட்ரோ மால் - 1.8 கி.மீ
    2. ஃபோறும் விஜயா மால் - 3.9 கிமீ
    3. விஆர் சென்னை- 6.2 கிமீ

  • 1. நியூ ஆந்திரா மீல்ஸ் ஹோட்டல் - 450 மீ
    2. ஹாட் & டேஸ்டி- 850 மீ
    3. கிராண்ட் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ் - 1.3 கிமீ

  • 1. மியோட் - 3.4 கிமீ
    2. விஜயா மருத்துவமனை- 3.8 கி.மீ
    3. சிம்ஸ் மருத்துவமனை - 4.4 கி.மீ